கன்னி:ராசி பலன்
கன்னி
உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் சனியும் 11-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும்.

வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். விவசாயிகளுக்கு மகசூல் கூடும். ஆதாயமும் கிடைக்கும். ஆலைகள், தோட்டங்கள், சுரங்கங்கள் ஆகிவற்றில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகம், நிறுவனம், எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் போன்ற இனங்களைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற இனங்கள் லாபம் தரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். 2-ஆம் தேதி முதல் சனி வக்கிர நிவர்த்தி பெறுவது சிறப்பாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

4-ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும்; எச்சரிக்கை தேவை. செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பிரச்னைகளைக் குறைத்துக் கொள்ளலாம். 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். 17-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவதால் அரசாங்கத்தாராலும் தந்தையாலும் மக்களாலும் சங்கடங்கள் ஏற்படும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். 23-ஆம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறினாலும் பலம் பெறுவதால் நலம் புரிவார். தொஇல் வர்த்தகம் வியாபாரம் ஆகியவற்றில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை போன்ற இனங்கள் ஆக்கம் தரும்.

உத்திரம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் சற்று கூடும்,

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 2, 9, 10, 12, 17, 20, 21, 25, 27, 31 (பிற்பகல்).

திசைகள்: வடக்கு, மேற்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 5, 6, 8, 9.

Related Post